தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்!

தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் இம்முறை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு...

மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு

சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆலய உற்சவத்தையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இன்று காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக...
Ad Widget

மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரை சந்தித்த போது...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...

யாழ்.சிறுவர் பூங்காவில் விளையாடும் சிறுவர்களுக்கு டெங்கு பரவும் அபாயம்!

யாழ்.சிறுவர் பூங்காவிற்கு முன்னால் மாநகரசபையால் கழிவுகள் போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிற தொட்டிகளைச்சுற்றிலும் கடதாசி மற்றும் பிளாஸ்ரிக் குப்பைகள் சிந்தப்பட்டும், கொட்டப்பட்டுமுள்ளன இதனால் பூங்காவிற்கு வருகின்ற தமது பிள்ளைகளுக்கு டெங்கு பரவும் அபாயமுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழின் முக்கியமான இடமாக விளங்கும் இவ்விடத்தின் அருகாமையில் யாழ்மாவட்டச் செயலகம், ஆளுநர் செயலகம்,...

போர்க்குற்றம் இடம்பெறவில்லையென யாழில் நான் கூறிவில்லை! : ராஜித

போர்க்குற்றம் இடம்பெறவில்லையென அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தான் அவ்வாறு குறிப்பிடவில்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் கருத்து தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்து உரையாற்றிய போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ராஜித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வறுமைக்கு கரம் கொடுக்கும் ‘உணவளிக்கும் கரங்கள்’

நாம் ஓர் அற்புதமான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். எம்மைச் சூழ இரு வகையானவர்கள் வலம்வருகின்றனர். ஒரு சாரார் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இன்னோர் சாரார், ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இறைவன் படைப்பில் எவ்வித நீதமும் இல்லையென்று தோன்றுகின்றதல்லவா? சவூதி மன்னர் சல்மான் 460 தொன்கள் கணமான 23000 சுகபோக பெட்டி, படுக்கைகளுடனும், 1500 பணியாட்கள்,...

அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: நிதி அமைச்சர்

பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, வௌியான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புறக்கோட்டை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது, அங்கிருந்த வர்த்தகர்களிடம் அமைச்சர் விசாரணை...

போரால் அங்கவீனமானவர்களுக்கு விசேட கழிவறை: அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கு கிழக்கில் போர் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் பகுதி செயலிழந்துள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான விசேட கழிவறைகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அங்கவீனமானவர்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில் மாத்திரம் 1360 வீடுகளும், 953 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான...

2017 இற்குள் உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படும் : ஜனாதிபதி

தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தலை இவ்வாண்டுக்குள் நடத்த முடியும் என தாம் உறுதியாக நம்புவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொகுதிகளுக்கான எல்லைகள் உரிய முறையில் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்கு காரணம் எனவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார். புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன்...

சில பொருட்களை இறக்குமதி செய்யத் தடை! விற்பனை செய்தால் சிறை!!

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம்

சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இடம்பெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றினார். சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

யாழில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை!

இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையினைக் கொண்ட முதல் நகரமாக யாழ்ப்பாணம் அமையவுள்ளது. இதற்கு உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ்நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள், முக்கிய அரச அலுவலகங்களை இணைக்கும் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப்...

வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. மக்களின்...

பொதுச்சந்தைக் காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் நடத்தி வந்த சிறு வர்த்தக நிலையம், தேனீர் சாலை மற்றும் இலவச திரையரங்கு என்பவற்றை, அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். இந்தத் திரையரங்கு, வர்த்தக நிலையம் என்பன கடந்த புதன்கிழமை (05) அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

இரு நாட்களாக மைதானத்தில் தங்கியிருந்த மாணவன், மாணவி கைது

வீடுகளிலிருந்து வெளியேறி, இரண்டு நாட்களாக விளையாட்டு மைதானமொன்றில் தங்கியிருந்த, சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரையும் மாணவரொருவரையும், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயதுடைய இவ்விரு மாணவர்கள் இருவரும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இவ்விருவரும், நீர்க்கொழும்பு, கடொல்கெலே பொது மைதானத்தில் தங்கியிருந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளனர்....

வர்த்தகர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது!

விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்...

கிளிநொச்சியில் கவனிப்பாரற்றுத் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 47ஆவது நாளாகவும் தொடர்கின்றது. “சுதந்திரபுரத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எனது மகன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. அவரைப்பற்றிய தகவல்கள் இதுவரை எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை” என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவர் கண்ணீருடன்...

அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து...

விமல் வீரவன்சவிற்கு பிணை

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சரீரப் பிணைக்காக குடும்ப உறவினர் ஒருவர் முன்னிலையாக...
Loading posts...

All posts loaded

No more posts