வடக்கு கிழக்கில் போர் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் பகுதி செயலிழந்துள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான விசேட கழிவறைகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அங்கவீனமானவர்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில் மாத்திரம் 1360 வீடுகளும், 953 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அத்தோடு, அங்கவீனமானவர்களில் ஒரு தொகையினர் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லையென தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், எதிர்காலத்தில் இதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.