- Thursday
- May 14th, 2026
மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. குப்பைமேடு சரிந்துவிழுந்ததில், 17 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரை மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 13 வயதான பாடசாலை மாணவியும், 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள்...
இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் பொலிசார் விசாரணை செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மாமியாரின் கொடுமை காரணமாக இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...
வடமாகாணத்தின் பல பகுதிகள் வறட்சியினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தீவகப் பகுதிகள் மார்ச் மாதத்திலேயே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்துடன் ஒப்பிடும்...
குடும்ப பிரச்சினை கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐந்து மாடி குடியிருப்பு, கடற்கரை வீதி, குருநகர் பகுதியினை சேர்ந்த மகிபாலன் நெல்சன் (வயது 38) என்பவர் வயிற்றில் குத்துக் காயங்களுக்குள்ளான...
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று (11) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராஜா (வயது 58) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு, கடந்த 05ஆம் திகதி குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு நேற்று பி.ப 1.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது. குறித்த கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை...
யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை முதல் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலைய பொறப்பதிகாரி ரி.பிரதிபன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மாலை 2 மணிக்கு பின்னரான நேரங்களில் ஒடுங்கல் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவம் அவர் கூறினார். இலங்கையின் மத்தியில் உச்சம் கொடுக்கும் சூரியன் படிப்படியாக...
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து...
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமது...
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன்...
சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒருவர் தனது காணியை சுன்னாகம் காவல்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளார். உடுவில், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த புலம் பெயர்ந்த தமிழரே காவல்துறையினருக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார். குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள குறித்த காணியை, குடியிருப்பாளர்கள் அந்தக் காணியைக் கோரியுள்ளபோதிலும், அதற்கு காணி உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அத்துடன்...
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன. முன்னர் 40 ரூபாய்க்கு...
“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம்...
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி நேற்று (11) மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை...
முல்லைத்தீவு - நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு...
மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில்...
கனடாவில் வாழும் ஸ்ரீலங்கா பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்த நாட்டு குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்தமை தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற ஸ்ரீலங்கா பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த...
தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும் இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரால் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில்...
நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிமன் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
