யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை முதல் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலைய பொறப்பதிகாரி ரி.பிரதிபன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாலை 2 மணிக்கு பின்னரான நேரங்களில் ஒடுங்கல் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவம் அவர் கூறினார்.
இலங்கையின் மத்தியில் உச்சம் கொடுக்கும் சூரியன் படிப்படியாக நகர்ந்த எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்துக்கு நேரே உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 15 ஆம் திகதிக்கு பின்னர் யாழ்.மாவட்டத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
இதேபோல் இன்று (நேற்று) தொடக்கம் மாலை 2 மணிக்குப் பின்னர் ஒடுங்கல் மழை பெய்வதற்கான வாய்புகளும் உள்ளன. இவ்வாறு பெய்வதால் சில சமயங்களில் வெப்பநிலை குறைவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன எனவும் யாழ்.வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.