Ad Widget

மதுப்பாவனையைக் குறைத்துள்ள நல்லாட்சி: ஜனாதிபதி பெருமிதம்

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மதுபானம் மற்றும் புகையிலை என்பவற்றிலிருந்து வரும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமை இதனை நிரூபிக்கின்றது. இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக மதுபானம், புகையிலை என்பவற்றுக்கான வருமானம் குறைந்துள்ளது. இது மிகவும் சிறந்த ஒரு அடையாளமாகும்.

இதற்கு முன்னர் இந்த வருமானம் அதிகரிப்பது தான் இடம்பெற்றது. அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது என்பதன் அர்த்தம், மதுபானம், புகையிலை என்பவற்றின் பாவனை குறைந்துள்ளது என்பதாகும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Related Posts