உறவுகளை நினைவுகூர தயாராகிறது முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு, இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு...

சிறையில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் : அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்மீது சித்திரவதைகயாக பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓல் செவைவேர்ஸ் புறஜெக்ற் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த அமைப்பினால்...
Ad Widget

பனங்காட்டில் புத்தி கூர்மை : இராணுவத்தினரின் கண்காட்சி

பனங்காட்டில் புத்திகூர்மை எனும் இராணுவத்தின் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. 
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தலைமையில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இராணுவ படையணிகளைச் சேர்ந்த வீரர்களின் கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 குறித்த கண்டுபிடிப்புக்களைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும்...

முன்னாள் எம்பியை அழைத்தமைக்காக பாடசாலையிடம் விளக்கம் கோரும் கல்வியமைச்சு

கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி இந்துக் கல்லூரியின்...

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்றைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும்...

வித்தியாவின் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி வழக்கின் விசாரணைகள் கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு...

யாழில் ஆசிரியர் அடித்துக்கொலை!

சிறுப்பிட்டி ,மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவிசரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை!! : நான்கு பெண்கள் கைது

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி...

காலநிலையில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடுத்து வரும் சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இலங்கையின் தென் மற்றும் மேற்கு பகுதியில் அதிக மழையுடனான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பருவமழை நிலைமை நாட்டின் ஊடாக...

சம்பந்தனின் அலுவலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். “காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு,...

பஸ் மோதியதில் மாணவன் பலி : ஊர்காவற்றுறையில் பதற்றம்

ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார்...

முஸ்லிம்களை வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் தோப்பூர் பிரதேசத்தில் பதற்ற நிலை

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்கின்ற நிலையில், ஆளுநருடன் தற்போது அவசர சந்திப்பொன்று நடைபெற்று வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் இச் சந்திப்பில், முஸ்லிம் மற்றும் பௌத்த மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளார். எனினும், ஊடகவியலாளர்களுக்கு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் !

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும்....

புங்குடுதீவு மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள்...

தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாம் அரசியல் செய்பவர்கள் அல்லர்: சிவாஜிலிங்கம்

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாங்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். நாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைக்காக செயற்படுபவர்கள்” என வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்ற (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றன. இதன்போது கருத்துத்...

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து,...

வெள்ளை வானுக்கு அவர்களே பொறுப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதால், இராணுவம், கடற்படை, வான்படை அதன் கீழ் இயங்கும் ஊர்காவற்படை ஆகியவற்றால்...

ஜூன் 1 முதல் மூன்று மாத காலப்பகுதி டெங்கு ஒழிப்பு மாதமாக பிரகடனம்

தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார். அதேபோன்று டெங்கு...

நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் : சிறிதரன்

இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று நண்பகல் 12.30க்கு...

தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது. நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள்...
Loading posts...

All posts loaded

No more posts