Ad Widget

சிறையில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் : அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்மீது சித்திரவதைகயாக பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓல் செவைவேர்ஸ் புறஜெக்ற் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட 40 பக்கங்களைக் கொண்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆண்களும், இளைஞர்களும் சித்திரவதையாக தொடர்ந்தும் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுகின்றார்கள் எனவும் அது குறித்த தகவல்கள் வெளியாவதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் வல்லுறவுகள் நிறைய இடம்பெற்றன. எனினும், பெண்கள் சம்பந்தமான வல்லுறவு வழக்குகளைப் போலன்றி, தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஆண்கள் ஒப்புக் கொண்டது அல்லது அதுபற்றிய பதிவுகள் குறைவாகவே உள்ளன.

போரின் போதும், போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக, ஆண்கள் மீதான வல்லுறவுகள் இடம் பெற்றதற்கான பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய முழுமையாக தகவல்கள் தெரியவில்லை என்றாலும், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் நிறுத்தப்படவில்லை,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்ட ஆண்கள் பாலியல் வன்முறைகளை சந்திக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts