Ad Widget

முஸ்லிம்களை வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் தோப்பூர் பிரதேசத்தில் பதற்ற நிலை

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்கின்ற நிலையில், ஆளுநருடன் தற்போது அவசர சந்திப்பொன்று நடைபெற்று வருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் இச் சந்திப்பில், முஸ்லிம் மற்றும் பௌத்த மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளார். எனினும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தோப்பூர் – செல்வநகர் பகுதியிலுள்ள பௌத்த விஹாரைக்கு அருகிலுள்ள காணியில், காணி உரித்துடன் கடந்த 1959ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், குறித்த காணிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு நேற்றைய தினம் அங்கு சென்ற பௌத்த பிக்குகளும் இளைஞர்கள் சிலரும் கூறியுள்ளனர். அத்தோடு, அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியும் உடைத்தெறியப்பட்டுள்ளது.

எனினும், மக்கள் வெளியேறாததைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் குடியிருப்புகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தோப்பூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலில் குறித்த மக்கள் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts