- Thursday
- May 21st, 2026
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு நேற்ற காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் இறுதியுத்தம் நடைபெற்ற மாணிக்கபுரம் வாவிக் கரையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். போர்க்காலத்தில் சிறீலங்கா அரசினால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட...
உரிமையைக் கேட்டு அமைதியான முறையில் போராடும் மக்களின் போராட்டங்களை உதாசீனம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தனது நல்லெண்ண அடிப்படையில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் உட்பட இருவர் ஈரான் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயற்சித்தவேளை பேரம்பலன் மல்தியாளன் மற்றும் விஜயகுமார் பிரசான் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்...
கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கச்சார்வெளிப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர காவல்துறை இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளை காவல்துறையினர்...
நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாகின்றன. கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதற்கு அமைவாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இந்த வேலைத்திட்டம் அமுலாகும். இந்தப்பணியில்...
சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...
கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டதாக நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நினைவுக்கற்களை...
முள்ளிவாய்காலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன், பரிதாபமாக உயிரிழந்துள்ளான். வவுனியா, பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு வந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற போது, வீதியில் பயணித்த கெப் ரக வாகனம், சிறுவனை மோதியுள்ளது. படுகாயமடைந்த...
வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூறும் வகையில், இன்று வியாழக்கிழமை (18) முழுவதும், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தால் காரணமாக, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ள போதிலும், அரச நிறுவனங்கள்...
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் பங்குகொண்டு, சுடரேற்றி, போரில் உயிரிழந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்ததுடன் மூன்று நிமிட அக வணக்கமும் செலுத்தினர்.
கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர்களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே,...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து...
முல்லைத்தீவில் இன்று மாலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களது நினைவாக சிலைகளை அமைத்து, கல்வெட்டுக்களை பதித்து இன்று மாலை சிவில் அமைப்புகள்...
வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேரில் மூவருக்கு 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5 பேருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மடத்தடியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர். அந்த கும்பலுக்கு டில்லு...
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர்...
02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய (17-5-2017) தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழர் தாயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்கள் விரவி வாழும் தேசமெங்கும் இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ”எங்கள் பெருமைமிகு...
Loading posts...
All posts loaded
No more posts



