- Thursday
- May 21st, 2026
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கினை கொழும்பிற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ள நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக மாணவர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் படுகொலை வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
மே 18 நினைவேந்தல் நிகழ்வானது இன்று திருகோணமலை நகரின் கடற்கரையில் அமைந்திருக்கும் காந்திசிலைக்கு முன்னாள் மதியம் 1.45க்கு வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தீபம் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்...
சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால்...
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு...
2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, வாக்காளர் திருத்தத்திற்கான படிவங்களை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் குறித்த படிவங்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்களூடாக மீள சேகரிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று (15) முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட...
வவுனியா - புதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் நேற்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றிச்சென்ற...
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நேற்ற (திங்கட்கிழமை) குறித்த...
இலங்கையில் தற்போது ஆட்சி செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவி தேவையென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்க பயணம் மேற்கொண்ட நரேந்திரமோடியை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோதே தான் இவ்வாறு கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சம்பந்தன்...
இரட்டை பிரஜாவுரிமை கொண்ட யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் 6 பேரிடம் இரட்டை பிரஜாவுரிமை உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்” என்றும் அண்மையில் சிங்கள ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள்...
காலி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது. உலகெங்கிலும் கடந்த வாரம் 99 நாடுகளின் இணையத்தளங்கள்மீது ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், சிறிலங்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்விணையத்தளத்துக்குள் ஊடுருவிய இணைய ஊடுருவிகள், பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள்...
இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...
அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) - 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம்திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. அனைத்து...
வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சால் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவரைத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வாளுடன் வந்த இருவரும் நகரில் சாதாரணமாக நடமாடினர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் வாளுடன்...
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு காவல்துறை அதிகாரிகளும் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததும் பழைய பகை இருவருக்கிடையில் வாய்த் தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதனை அவதானித்த குறித்த விடுதி உரிமையாளர் இருவரையும் காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே...
“வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் இரு விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவரின் கைகளில்தான் உள்ளன” என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.விக்னேஸ்வரனுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...
Loading posts...
All posts loaded
No more posts
