- Sunday
- August 23rd, 2026
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லையென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த வலி.வடக்குப் பகுதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி இறக்குதுறை மற்றும் 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு...
பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...
மட்டக்களப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உச்ச நீதமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அரசாங்கம் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு...
வட மாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் திருமதி அனந்தி சசிதரன, தனது கடமைகளை, இன்று (03) பொறுப்பேற்றார். யாழ். ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்,தன்னுடை கடமைகளை, இன்று (03) மதியம், உத்தியோகபூர்வமாக அனந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், வட மாகாண...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அச் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்...
யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டி ஜே151ஆவது கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான உறுதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கையளித்துள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில், பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டு, இயக்கத்தில் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகளாக நியமனம் செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனா்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் டி.எம். சுவாமிநாதனே, மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னாள் போராளிகளான பட்டதாரிகளின் விவரத்தை திரட்டிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக,...
வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அனந்தி சசிதரன், சிவகரன்...
பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் யாழ் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும்...
மாகாணத் தெரிவுக்குழு என்னை முழுமையாக விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாகச் சென்று ஆஜராவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மக்கள் தங்கள் வாக்குப்பலத்தினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களைத் தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு...
மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன், மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக...
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தினையடுத்து அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தன. குறித்த காணிகளைத் துப்பரவாக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அக்காணிகளில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக அப்பகுதி...
கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்க எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல்...
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குரிய தீர்வாகத்தான் வரயிருக்கின்ற உத்தேச அரசியல் யாப்பு வரும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மாவட்டத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப் பினர்களும், முஸ்லிம்களை அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்.மாவட்ட...
நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததற்கு முரணான வகையில் எமது பிரச்சினை களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கினையே முன்னெடுக்கின்றது. எனவே, இந்நிலை நீடித்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் குறிப்பிடுகையில் , எமது பிரச்சினைக்கு தீர்வு...
Loading posts...
All posts loaded
No more posts
