மீன்கள் இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் நந்திக்கடல் களப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டுவாகல் களப்பில் பல்வேறு வகையான மீனினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் நிலவிய கடும் வறட்சியே அதற்கான காரணம் என மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வறட்சியான காலநிலையில் களப்பு மற்றும் கடலுக்கு இடையிலான தொடர்பு...

வடக்கில் வறட்சி தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்

தென்மெற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும், நாட்டின் ஏழு மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும்...
Ad Widget

பளை துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது...

நல்லூரில் தண்ணீர் தருவதாக மோசடி செய்தவர்கள் தாக்கப்பட்டனர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். நீர் பாதுகாப்பு என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி...

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு யாழ்ப்பாணம் விஜயம்

கதிர்காமம் முருகன் ஆலய தலைமை மதகுரு பஸ்நாயக்க நிலமே நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை நட த்தியுள்ளார். நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.விஜயம் செய்த பஸ்சநாயக்க நிலமே நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஆறுதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அத்துடன், நல்லூர் கந்தசுவாமி...

சமூக வலைத்தலங்கள் ஊடாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சமூக வலைத்தலங்கள் ஊடாக இனங்கள் மற்றும் ஆகமங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பும் நபர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்பொருட்டு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றில்...

எழுதுமட்டுவாழில் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நடைபெற்றது

வடக்கு கால்நடை அமைச்சின் ஏற்பாட்டில் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.06.2017)எழுதுமட்டுவாழில் நடைபெற்றது.எழுதுமட்டுவாழ் ஸ்ரீ கணேச வித்தியாசாலையில்இடம்பெற்ற இச்சேவையை வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்மாவட்டத்தில் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 16 வைத்திய நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கால்நடை வளர்ப்பாளர்கள் இம் மருத்துவ...

அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது. இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை...

பாதிக்கப்பட்ட மக்களுடன் சம்­பந்தன்

தென்­னி­லங்­கையில் அனர்த்தம் இடம்­பெற்ற பகுதிகளுக்கு இன்­றைய தினம் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேரடியாக சென்று பார்­வை­யிட்டுள்ளார். அதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாவிட்டால் கூட்டமைப்பினருக்கு தோல்வி!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்காவிட்டால், அது அரசியல் தோல்வியாகவே அமையும் என்பதே அரசியல் கைதிகளின் கருத்து என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கூறியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகஸின்...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நடப்பு ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த...

கருத்தமர்வு எனக்கூறி மாணவியை அழைத்துசென்ற ஆசிரியரால் பரபரப்பு!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...

வடமாகாணத்தில் இன்று மின்தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நுணாவில், கைதடி, நாவற்குழி,...

இலக்கத்தகடுகளை அகற்றியமை தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது

வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை வடக்கு குரு வீதி...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி

இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் தற்போது யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பர்...

50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும்: சம்பிக்க ரணவக்க

உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போது யாழ்ப்பாணத்தை...

இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திராதிகள் உதவியுடன் அந்த பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல்...

திருகோணமலை நகரில் இஸ்லாமிய வணக்கஸ்தலம் மீது தாக்குதல்

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது. குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது இத்தீ வைப்பினால்...

பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது :வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று...

திருவடிநிலைக்காடு தீப்பற்றி எரிந்து பல ஏக்கர் நாசம்

பொன்னாலை தொடக்கம் திருவடி நிலை வரையான காடு நேற்றைய தினம் தீப்பற்றி எரிந்ததில் பல ஏக்கர் கணக்கான காடு நாசமாகியுள்ளது. நேற்று முற்பகல் 10 மணியளவில் மேற்படி காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர் அது தொடர்பாக வலி. மேற்கு பிரதேச செயலாளர் செல்வி பிறேமினி மற்றும் பிரதேசத்திலுள்ள கடற்படையினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts