Ad Widget

மீன்கள் இறந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் நந்திக்கடல் களப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வட்டுவாகல் களப்பில் பல்வேறு வகையான மீனினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பிரதேசங்களில் நிலவிய கடும் வறட்சியே அதற்கான காரணம் என மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வறட்சியான காலநிலையில் களப்பு மற்றும் கடலுக்கு இடையிலான தொடர்பு இல்லாமல் போகின்றது.

அதன் காரணமாக களப்பு நீர் குறைவடைந்ததனால் நீரின் வெப்பநிலை அதிகரித்தது.

அதனால் அங்கு ஒக்சிஜனின் அளவு குறைவடைந்தமையும், கடந்த தினத்தில் திடீரென நாட்டில் ஏற்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அதிகளவான கழிவுகள் களப்புடன் இணைந்தமையும், மீன்கள் இறந்தமைக்கான காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts