தென்மெற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனினும், நாட்டின் ஏழு மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் இடியுடன் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்தோடு, மாத்தளை, பொலனறுவை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.