அமைச்சர் டெனிஸ்வரன் மீது நடவடிக்கை : முதல்வர் விக்கி

வட­மா­காண போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் அறி­வித்­துள்ளார். வட­மா­காண அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்­பாக அவர் பிர­தி­நி­தித்­துவம் தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லாளர் ந.ஸ்ரீகாந்­தா­வினால் அனுப்பி வைக்­க­கப்­பட்ட கடி­தத்­திற்கு பதி­ல­ளிக்கும் வகையில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் அனுப்­பிய பதில் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,...

வித்தியா படுகொலை: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
Ad Widget

கலைத் துறையைக் கற்று வேலையில்லாத பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர் : மாவை

“அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தனியே அரசியல் ரீதியிலான விடுதலை மட்டுமல்லாது, போதைவஸ்தில் இருந்தும் மதுபாவனையில் இருந்தும் எங்கள் குடும்பங்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த மாணவ சந்ததி, இவற்றைக் கிரகித்துக் கொண்டு, ஒழுக்கமுள்ள சந்ததியாக, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்ச்சியைக் கொடுக்க வ்வேண்டும். மதுவுக்கு எதிராகவும் போதைவஸ்துக்கு எதிராகவும் அவர்கள்...

யானைகளின் தொல்லை அதிகம் மக்கள் அவதி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும்...

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு : மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது அத்தோடு...

தமிழ் இனத்திற்காக ஆயுதம் ஏந்தியது தவறா? : முன்னாள் போராளிகள் ஆதங்கம்

”தமிழ் மக்களுக்காக போராடியது குற்றமா – தமிழ் மண்ணில் பிறந்தது குற்றமாக – ஏன் எங்களை புறக்கணித்து சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றீா்கள்” என்று முன்னாள் போராளியும் புனா்வாழ்வளிக்கப்பட்ட நபா்களின் ஒன்றியத்தின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வுதுறையின் சிரேஷ்ட தளபதியாக இருந்தவருமான அன்பு (கந்தசாமி இன்பராசா) கேள்வி எழுப்பியுள்ளாா். புனா்வாழ்வு பெற்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக...

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்வு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இக்காலப் பிரிவில் மாத்திரம் 91000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தத்தமது வீடு, சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாத்திரமே இந்த டெங்கு...

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி!

முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. மேற்படி கவனயீர்ப்பு பேரணியானது முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஆரம்பமானது. போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட,...

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல: பொலிஸ் மா அதிபர்

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக பொதுமக்களின்...

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது...

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை இன்று அரசு பொறுப்பேற்கிறது

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான நெவில் பெர்னர்ணடோ தனியார் வைத்தியசாலை, அதன் உபகரணங்கள்,...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கேள்வி பதில்!

கடந்த 12-07-2017 அன்று வசந்தம் தொலைக்கபட்சியின் அதிர்வுகள் நேரடி விவாத நிகழ்வில் ஒளிபரப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான கேள்விபதில் நிகழ்வு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=5zm8jUk95PE&feature=youtu.be

சட்டவிரோத குடியேற்றங்கள் , காடழிப்பை எதிர்த்து முல்லையில் பாரிய போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவு ள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர்...

ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு : சம்மந்தன்

ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி...

வித்தியா கொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாருக்கு, தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக அவர் மீது...

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மேற்படி படகுகளை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்படவுள்ள படகுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ம் திகதியிலிருந்து நவம்பர் 10ஆம் திகதி வரை கைப்பற்றப்படவை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் விடுவிக்கப்படும் இந்த படகுகள் எதிர்வரும்...

ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை!

வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக...

அரசியல்வாதிகள் அரசியலுக்காக நடத்தும் உண்ணாவிரதம் போல அல்லாமல் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து...

தெற்கு மக்களுக்கு கைக்கொடுத்த புலம்பெயர் தமிழர்கள்!! நன்றி தெரிவித்தது இலங்கை அரசு!!

தெற்கில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் 780 பேர்வரை நன்மையடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தென்பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கிய உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி பாராட்டியுள்ளதாக ஊடகமொன்று செய்தி...
Loading posts...

All posts loaded

No more posts