- Thursday
- May 21st, 2026
இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்ட உறுப்பினர்கள் சி.வி.கே. சிவஞானத்தைப்போல் பணம் படைத்தவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தின் முதலமைச்சர் பதவியோ, அமைச்சர் பதவியோ, அவைத்தலைவர்...
வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும்,...
கொழும்பில் வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,...
கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை...
முல்லைத்தீவு மல்லாவி நகரப்பகுதியில் பண்டாரவன்னியன் சிலை ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. எனினும் திறந்து வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே அச்சிலையின் ஒரு பக்க கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலையானது சேதமடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதுடன், இது மாவீரன் பண்டாரவன்னியனை கொச்சைப்டுத்தும் செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழரின் வீரத்தை...
எதிர்வரும் புதன்கிழமை பாதுகாப்பு செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இரணைத்தீவு விடயம் தொடர்பில் கலைந்துரையாடிய பின்னர் தீர்வுகளை வழங்குவதாக கிளிநொச்சி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கூறியதை அடுத்து இரணைதீவு மக்கள் இன்று காலை 8 மணி முதல் முன்னெடுத்த வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் மன்னார், யாழ் வீதியின் போக்குவரத்து சுமார்...
இலங்கைக்கு புயல் காற்று வீச கூடும் என வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அனலைதீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாம் வட பிராந்திய கடற்படை கட்டளையகத்தின் சமூக சேவை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குறித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர். இங்கு வருகைதந்த கடுமையான...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள சேவை புறக்கணிப்பு சம்பந்தமாக இதுவரை எடுக்காத நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ’மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த...
இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி தனது 81 ஆவது வயதில் நேற்று நியூசிலாந்தில் காலமாகியுள்ளார். யாழ்.புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கற்று சட்டதுறைக்குள் பிரவேசித்து 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞ்ஞர் ஆனார். பின்னர் 1988 ஆம் ஆண்டு, மாவட்ட நீதிபதியாக...
பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, இந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம்...
சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக்...
ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலநறுவை, சுங்காவில முஸ்லிம்...
வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக...
கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரிதும்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய் படத்துக்கு மெர்சல் பெயர் சூட்டியது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள்...
வடக்கு மாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில், நகை அடகு பிடிப்பவர்களுக்கான நியதிச்சட்டம் குறித்த குழு நிலை விவாதம் நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் அண்மைய காலமாக...
வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்தது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (21) மாலை இடம்பெற்றன. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்...
Loading posts...
All posts loaded
No more posts
