Ad Widget

யாழில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்

யாழ்ப்பாணம் அனலைதீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாம் வட பிராந்திய கடற்படை கட்டளையகத்தின் சமூக சேவை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குறித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கு வருகைதந்த கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு கடற்படை மருத்துவ குழுவினர் ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சையினை வழங்கினர். சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் என்பனவும் இலங்கை திரிபோஷா நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகிவற்றின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றது.

இதேவேளை, யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான மற்றுமொரு மருத்தவ சிகிச்சை கடந்த 10ம் தகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 215 குடும்பங்கள் பயனடைந்தனர்.

இலங்கை கடற்படையினர், பொதுமக்களின் நலன் கருதி இவ்வாறான பல சமூக நலன்புரி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts