Ad Widget

சிறிலங்காவின் ரூபா பாரிய வீழ்ச்சி!

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக இருக்கிறது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையிலேயே, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts