அரச வைத்தியசாலை அம்பியுலன்ஸ் சாரதிகளும் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்

நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளின் அம்பியுலன்ஸ் சாரதிகள் இன்று (27) காலை 7.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சகல மாகாண சபைகளிலும் உள்ள சுகாதாரத்துறை அம்பியுலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதாக ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை மாகாண சுகாதார சேவை சாரதிகள்...

நயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு

நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து...
Ad Widget

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா, கண்டி மற்றும் காலி கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டலாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது....

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவி வழங்கலாம்! :சித்தார்த்தன்

எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தற்போது வடமாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்திருந்தார். இந்நிலையில், அமைச்சுக்களை அமைப்பது தொடர்பாக...

ஆஸியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு தொகுதியினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்ரேலிய குடியகல்வு குடிவரவு திணைக்களத்தினால் அரச விமானமொன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 24 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில்...

கூட்டமைப்பிற்கு எதிரான விமர்சனங்கள் அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: ஸ்ரீ கஜன்

தற்போது பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கத்திற்கான அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக் காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை: மாவை

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள தமிழ் நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஓர் சமூக...

இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் புத்துணர்வு பெற்றது

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லம் நேற்று (திங்கட்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பிமலையிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து இந்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்...

முதலமைச்சரைப் பதவி கவிழ்க்கும் சதியின் முதற்கட்டமாக என்னைக் குறிவைத்தார்கள் ஐங்கரநேசன் தெரிவிப்பு

முதலமைச்சர் தங்களின் கைப்பாவையாக தொழிற்படுவார் என்றே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் நம்பியிருந்தது. ஆனால் அவர் இங்கே வந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரைத் தினம் தினம் சந்திக்கச் சந்திக்க மக்களின் வலியை உணர்ந்தவராகத் தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாடுடையவராக மாறினார். இதனால் அவரைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பிய அவர்கள்இ அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்களையோ  இலஞ்ச...

யாரோ திருடிவிட்டார்கள்!! நான் கடிதம் எழுதவேயில்லை! :சிறீதரன்

தனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுபோல யாரே மோசடியில் ஈடுபட்டுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்றும் கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு வேண்டாம் என்று கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர் தனது அரசியல் நேர்வழியை அதேவழியில் எதிர்கொள்ள முடியாத சில...

வடக்கில் இன்று மின் விநியோகத்தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தபடவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணிமுதல் மாலை 5.30 வரை மின்சார விநியோகம் தடைபடுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது இதற்கமைய,யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவாந்துறை, மீனாட்சிபுரம் வீதி, முத்தமிழ் வீதி,...

தனியார் கல்வி நிலைய மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : இரு மாணவர்கள் படுகாயம்

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில்...

வடமாகாண முதலமைச்சர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தாண்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் : சரத் பொன்சேகா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டிவிட்டால், அவர் மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, அதைவிட வேறு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கடவத்தை விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினராலேயே வடக்கு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப்...

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்: கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த காப்புறுதி திட்டத்தை இதற்கமைய அடுத்த இரண்டு மாதத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நோய் வாய்ப்பட்டால் அரச வைத்தியாசலை...

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மிதிவெடிகள்!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர...

இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு, அவசர சேவையும் தேவைப்படின் நிறுத்தப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

ஒரு சில வைத்தியசாலைகளைத் தவிர நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் இன்றும் (23) பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வருவதா? இல்லையா? என்பதை நோயாளர்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று காலை 8.00 மணிக்கு...

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய அங்கத்தவர்கள் பணம்படைத்தவர்கள் : கஜேந்திரகுமார்

தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்ட உறுப்பினர்கள் சி.வி.கே. சிவஞானத்தைப்போல் பணம் படைத்தவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தின் முதலமைச்சர் பதவியோ, அமைச்சர் பதவியோ, அவைத்தலைவர்...

கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும் : முதல்வருக்கு சிறிதரன் கடிதம்!

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும்,...

வைத்தியர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் படுகாயம்

கொழும்பில் வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,...
Loading posts...

All posts loaded

No more posts