நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளின் அம்பியுலன்ஸ் சாரதிகள் இன்று (27) காலை 7.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
சகல மாகாண சபைகளிலும் உள்ள சுகாதாரத்துறை அம்பியுலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதாக ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை மாகாண சுகாதார சேவை சாரதிகள் சங்க செயலாளர் அமரானந்த வடுகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவசிய சேவைகளாக கருதி அவசர நோயாளர்களுக்கு மாத்திரம் சேவையை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.