வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். எனவே, இவ்விடத்தில்...

துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார்

யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு...
Ad Widget

ICTA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் இராஜினாமா

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட...

காணாமல் போனோரின் உறவினர் முன்னிலையில் கண்கலங்கிய இராணுவத்தளபதி

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர். இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின்...

முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிப் பட்டறை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பயிற்சிப் பட்டறையொன்று, மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. ‘மகிழ்ச்சியான குடும்பம் நல்ல சூழலை உருவாக்கும்’ என்ற தொனிப்பொருளினால் ஆன இப் பயிற்சிப் பட்டறை, மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. பொருளாதாரம், சமூக இணைப்பு, மகிழ்ச்சியான குடும்பம், சிறுவர் மேம்பாடு போன்ற தலைப்புக்களின் கீழ் இதன்போது கலந்துரையாடப்பட்டன. புனர்வாழ்வு அதிகார...

யாழில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்திலும் இன்று நடைபெற்றன. யாழில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆ.நடராஜனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது இந்திய துணைத் தூதுவர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட...

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு!

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. ஒரு படகில் நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் ஒருவர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின்...

பணியாளர்களை அச்சுறுத்தும் பொலிஸ் மா அதிபர் (காணொளி இணைப்பு)

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் காட்சிகளை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சீசீடிவி காணொளியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே குறித்த இணைத்தளத்தில் வெளியாகியுள்ளன https://youtu.be/WuVj4DpmXpc காலை நேர தியான பயிற்சிகளுக்கான ஒழுங்குகளை மீறியமைக்காகவே அவர்களை பொலிஸ் மா அதிபர் அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த...

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது.

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் இ. விக்னேஸ்வரன் உட்பட பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 87 பேரையும் வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது காவல்துறை!

அண்மையில் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 87 இளைஞர்களையும் பாழ்ப்பாணச் சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதி கோரியுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒரே சிறையில் தடுத்து வைத்திருப்பதால் அவர்கள் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே வேறு சிறைக்கு மாற்றக் கோரியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக...

யாழ்- கொழும்பு பயணிகள் பேருந்துக்கள் சிக்கின!

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியாருக்கு சொந்தமான ஐந்து அதிசொகுசுப் பேருந்துகளும் ஒரு அரை சொகுசுப் பேருந்தும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையில் போது குறித்த ஆறு பேருந்துக்கள் சிக்கியுள்ளதுடன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின்...

நம்பிக்கையை சிதறடிக்கும் முதலமைச்சர் சி.வி: சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்...

அமைச்சுப் பதவியில் இருந்து விலக மாட்டேன்: டெனிஸ்வரன்

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சிப்பொறுப்பில் இருந்து தான் ஒரு போதும் சுய விருப்பத்துடன் பதவி விலகப்போவதில்லை என்றும், கட்சியோ முதலமைச்சரோ தனக்கு பெரியவர்கள் இல்லை என்றும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு டெனிஸ்வரனுக்கு டெலோ அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாடு குறித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் உள்ள அமைச்சரின் உபஅலுவலகத்தில்...

தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து...

முச்சக்கர வண்டியில் புகையிரதம் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியே குறித்த விபத்து நேற்று(திங்கட்கிழமை) சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த...

சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி!!!

புங்குடுதீவை சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகளை பயன்படுத்தி ஆபாச காணொளி தயாரித்துள்ளார்.சுமார் 5 காணொளிகள் அவ்வாறு...

மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதற்கு இடமளியோம்: சம்பந்தன்

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாது, தமது தீர்மானத்தை அறிவிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில், கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம் : அமைச்சர் விஜயகலா

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை...

சுமாத்ரா நிலநடுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் இன்று (13) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும்...

நீதிபதி இளஞ்செழியனுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழி­யனை இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத்­ தூ­துவர் அப்துல் கேசாப் சந்­தித்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டி­ருந்தார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணி­நேரம் இடம்­பெற்­றது. நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்கி பிரயோக சம்பவத்தில் கொல்­லப்­பட்ட பொலிஸ் சார்­ஜ­ன்டினது மனை­வியின் காலில் வீழ்ந்து நீதி­பதி அழுத காட்­சியை பார்­வை­யிட்ட அமெ­ரிக்­கத்­தூ­துவர், தாம் இதைக்கண்டு மனம் நெகிழ்ந்­த­தாக தனது...
Loading posts...

All posts loaded

No more posts