படைக்கு தமிழர்களை சேர்க்கும் வேலையை முதலமைச்சர் கைவிடவேண்டும்: சிவமோகன்

அரசினால் தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையச்சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் இளைஞர்...

டெனிஸ்வரனின் நடவடிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கட்சியின் கட்டளை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் ஊடகங்களுக்கு...
Ad Widget

இலங்கை, இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிகை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ்...

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான யோசனைகள் அடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட வரைபு, அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,...

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் பொறுப்பல்ல!!

“யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு...

டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக பண்புகளை மீறும் செயல் : ஜனநாயகப் போராளிகள் கட்சி

வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. வடமாகாண சபை அமைச்சர் டெனீஸவரன் பதவி விலகல் தொடர்பாக ஜனநாயப் போராளிகள் கட்சியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . வடக்கில் இடம்பெறும் பதவிசார்...

வெற்றிடங்களை நிரப்ப தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பியுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் விண்ணப்பங்கள்...

‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம்

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர்...

கிளிநொச்சியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!! பொதுமக்கள், பொது அமைப்புகளுக்கு அவசரவேண்டுகோள்!!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி...

ஜேர்மனியிலும் ஆவா குழு! : முதலமைச்சர் சி.வி

ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும்...

சீனிக்கான விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்காக அறவிடப்படும் விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (16) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதை அடுத்து,சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சீனிக்கான...

லட்சக்கணக்கானோர் புடைசூழ மடு அன்னைக்கு திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா திருப்பலி, நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர்...

கண்டாவளை பகுதி காணிகளை விடுவித்தது ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு தொகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள 38 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தமைக்கான ஆவணங்களை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ராணுவத்தினர் கைளித்துள்ளனர். இக் காணிகள் உரிய முறையில் இனங்காணப்பட்டு, காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு...

அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என்ற அச்சம் எனக்கும் உள்ளது: அனந்தி சசிதரன்

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து...

உள்ளக கணக்காய்வாளர் நியமனங்கள் ஆளுநரால் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைத்துள்ளார். வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவாகிய 13 பேருக்கான நியமனக் கடிதங்களையே ஆளுநர் தனது செயலகத்தில் வைத்துக் கையளித்தார். சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன்,...

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில்...

தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்: இரா. சம்பந்தன்

காணி விவகாரத்தில் தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல என்றும்...

மணற்காட்டு படுகொலைச் சம்பவம்: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மணற்காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மணலேற்றிச் சென்ற லொறியின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்....

ஆவா குழுவுடன் தொடர்புடைய இன்னுமொருவர் கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் தருசன் என்ற இளைஞனே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் முகநூலில் ஆவா குழுவினைச் சேர்ந்த நபர்களுடன் குழுவாக எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞனை...

வெள்ளத்தில் மூழ்கியது மடு திருத்தலம் : யாத்திரீகர்கள் திரும்புகின்றனர்

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைந்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள...
Loading posts...

All posts loaded

No more posts