சிறையில் பரீட்சை எழுதும் ஆவா குழுவினர்!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், சிறைச்சாலையில் இருந்து கொண்டு, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்தார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அன்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன்...

ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்திய எமக்கு கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை!!

வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார். மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற...
Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ம் திகதி!

அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நாட்டிலுள்ள தேசிய...

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவசமாக விநியோகம்: ஜனாதிபதி

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டினது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு அரசாங்கமும் தீர்வு காணாத குப்பை பிரச்சினைக்கு இந்த அரசாங்கம்...

கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினரால் 200 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம்!

கிளிநொச்சியில், பாதுகாப்புப் படையினரால் பொதுமக்களுக்கான உதவிகள் வழங்கும் நலத்திட்டத்தின் கீழ் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி நெலும் பியசவில் கேட்போர்கூடத்தில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன. மேற்படி நிகழ்வினை கொழும்பு விஷன் கெயார் நிறுவனத்துடன் இணைந்து 65 ஆவது படைப்பிரிவு ஒழுங்கு படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பார்வைக் குறைபாடுடைய 200 பேருக்கு இலவசமாக...

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடயம் தொடர்பில் தங்களுக்கு ஜூலை 20ஆம் திகதி நான் கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிரதி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களது செயலாளர்...

என்னை வைத்து அரசியல் செய்து விட்டனர்: பாடகர் உன்னிகிருஷ்ணன்

நான் ஒரு கலைஞன், நான் இலங்கைக்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் வருத்தத்துடன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக திட்டமிட்டிருந்தத நிலையில், தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில்...

அபிவிருத்தி நிதி திரும்பிச் சென்றால் முதலமைச்சரே பொறுப்பு: டெனிஸ்வரன்

வடமாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால வரலாறுகளில் வடமாகாண சபைக்கு...

சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டால் அரசியலமைப்பு உருவாக்கம்தாமதம்: சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடே காரணம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் விவாதிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதுவும் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும்...

ஆவா என்பது புலிகள் இல்லை: இராணுவத் தளபதி

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை எனவும், வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் உபயோகப்படுத்தப்படுவது ஏற்கத் தகாதது என்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,...

உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி...

மாணவ தாதியர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கோரியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் விகிதாசாரத்துக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எண்ணிக்கை தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2015 அல்லது 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும்...

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதில் அவர்களிருவரும் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை(11) மாலை 04 மணியளவில் யாழ். கைதடி மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். கைதடி மானிப்பாய் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல்...

கையடக்க தொலைபேசி பாவனை அரைப் பைத்தியமாக்கியுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்.

கையடக்க தொலைபேசி பாவனை மனிதனை அரைப் பைத்தியங்களாக வீதியில் உலாவரும் நிலைமைக்கு தள்ளியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். புத்தகத்திருவிழா நேற்று மாலை மாநகரசபை சுகாதாரப் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ், சிங்கள மொழி பயிற்சி!

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம், தேசிய பிரச்சினைக்கு ஓரளவு முடிவு கட்டலாம் என சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடநெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தார் சிவாஜிலிங்கம்

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியாடியுள்ளார் இதன் போது காணாமல் போன உறவுகள், தாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினருக்கு எடுத்து கூறியுள்ளனர்....

டெலோ உறுப்பினர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கோடு இன்று வவுனியாவில் கூடியுள்ளது. வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுபினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது வட மாகாண அமைச்சராக உள்ள டெலோவை சேர்ந்த பா.டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான...

வட. மாகாண அமைச்சுப் பதவிகளை பகிர்ந்தளிக்க தீர்மானம்

வட. மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வட. மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, இலங்கை தமிழரசு கட்சி வடமாகாண சபையில் அமைச்சுப்...

முந்தைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டது: சம்பந்தன்

முந்தைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டது. இந்நிலையில், இந்த அரசாங்கம், கட்சிகளிடையிலான அரசியலை கைவிட்டு மக்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர்...

வவுனியாவில் வாளுடன்ஒருவர் கைது : ஆவா குழுவுடன் தொடர்பானவரா என பொலிஸார் தீவிர விசாரணை!!

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவுடன் தொடர்பானவரா என்ற அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தேக்கவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் க.கனிஸ்டன் என்ற...
Loading posts...

All posts loaded

No more posts