பொலிஸாரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது : சிவாஜிலிங்கம்

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்காகவே இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு அவருடைய பாதுகாவலர்கள் இருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்தார். ஆனால் பொலிஸார் அவசர அவசரமாக துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதி அல்ல என கூறுவது பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருக்கின்றது என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார். நீதிபதி...

நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

யாழ். இளைஞன் மரணம்: பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி, மணற்காட்டுப் பகுதியில் அனுமதியற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் என்ற...

வித்தியா கொலை வழக்கில் இரசாயன பகுப்பாய்வாளர் சாட்சியமளிப்பு

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார நேற்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தம்!

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தப்பிச் செல்லும்வேளை ஆற்றில் குதித்த நபர்களில் ஒருவரே இவ்வாறு நீரில்...

வட. மாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள...

யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை பிடிக்க இரு விசேட குழுக்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள்...

திருகோணமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு இளஞ்செழியன் அவர்களைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கொல்ப்பட்டதுடன், நீதிபதி தெய்வாதீனமாக காயங்களின்றி தப்பியுள்ளார். அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளிலும், பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளிலும் அரசியல் கட்சிகள் என்னும் போர்வையில் துணை இராணுவக்குழுவாக இயங்கியவர்களிற்கு எதிரான வழக்குகளையும் மிகத் துணிச்சலுடன்...

09 பயின்ட் இரத்தம் ஏற்றியும் உயிரை காக்க முடியவில்லை: பணிப்பாளர் வருத்தம்

நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நல்லூர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....

அச்சுறுத்தல் நிலவிய வேளை போகாத உயிர். அமைதியான காலத்தில் போய்விட்டது. : யாழ்.மேல் நீதிபதி வருத்தம்

வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் எனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் யாழ்பாணத்தில் அமைதி நிலவும் போது போயுள்ளது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார். நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாவலர் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்: வடக்கு முதல்வர்

நல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிள்றோம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உப பொலிஸ்மா அதிபருக் பணித்துள்ளேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் உள்ளதாவது- கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த பொலிஸ் சார்ஜென்ட்...

‘நீதிபதி எம். இளஞ்செழியன் இலக்கு அல்ல’ : யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

நாளை கண்டனப் பேரணி!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...

தீர்வு கிடைக்கும் என்று நம்பியே இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம்: மாவை

நாம் இந்த ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களைத்தான் தமிழ்...

வட.மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். நீதிமன்ற வளாகத்தில் நேற்திறயதினம் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவி சாந்தா...

நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது: கஜேந்திரகுமார்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்கு, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு,...

நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை விடுத்துள்ளார். அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை...
Loading posts...

All posts loaded

No more posts