- Wednesday
- May 20th, 2026
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில்...
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை கொண்டுசெல்வதை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் தாங்கிகளை மறித்தும், விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசென்ற ரயிலை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெற்றோலிய வளத்துறை ஊழியர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலன்னாவ...
உயிரிழந்தவரின் காலை உயிருள்ளவருக்குப் பொருத்தி தமிழ் வைத்தியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். இச்சாதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குருதிக் கலன்கள் தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் யோ. அருட்செல்வன் என்ற வைத்தியரே இச்சாதனையைச் செய்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணெய் சேவையாளர்களை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு, பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து திருகோணமலை சீனக்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதிகளை மீட்க வேண்டும், அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் களஞ்சிய...
நவம்பர் மாதம் அளவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்யும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்....
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அத்துடன், அதே நீதிமன்றத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வழக்கில், இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சக இராணுவ கோப்பரல் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு...
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கு...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளன. அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பல தலைவர்கள் அஞ்சலி...
எரிபொருள் விநியோகம், அத்தியவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை முதல்...
நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் விரைவான விசாரணையைக் கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் இன்று பிற்பகல் 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகம் முன்பு கவணயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் “சுட்டதால் சட்டம் சாகாது”, “வன்முறை வேண்டாம்”, “நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா நல்லாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா”, “நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாதபோது...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர். அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது அந்த இடத்தில், இராஜாங்க...
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்தார். இவர் நல்லூரை சொந்த இடமாக கொண்ட சிவராஜா ஜெயந்தன் 39 வயது இவரிடம் மேற்கொண்ட பொலிஸ்விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கையில், நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கில் யாழ். பொலிஸ் நிலைய...
குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும்,...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் இல்லத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை...
யாழில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து, கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் இக்கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி சேவை சந்தை முழுமையாக முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நகர் வீதிகளிலும்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்...
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸில் சரண் அடைந்துள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்பவரே துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று தப்பி ஓடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் தானாகவே...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுகாலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைகடத்த முயற்சித்தமை, வைத்திய சபையின் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர்...
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறிவைத்து நல்லூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிக்காகக் குரல் எழுப்பும் அனைத்துத் தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வருவதும், உண்மை கண்டறியப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக்...
Loading posts...
All posts loaded
No more posts
