Ad Widget

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கவணயீர்பு போராட்டம்

நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் விரைவான விசாரணையைக் கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் இன்று பிற்பகல் 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகம் முன்பு கவணயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் “சுட்டதால் சட்டம் சாகாது”, “வன்முறை வேண்டாம்”, “நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா நல்லாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா”, “நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களின் நிலை”, “சுட்டதால் சட்டம் சாகாது” போன்ற கோசங்களும் முன் வைக்கப்பட்டது.

போராட்டதின் இறுதியில் அரச அதிபரின் பிரதிநிதி ஊடாக ஐனாதிபதி, நீதியரசர் ஆகியோருக்கும் மஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related Posts