- Wednesday
- May 20th, 2026
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,...
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக...
அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் கும்பல், வேலை...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக...
யாழ். திருநெல்வேலி கலட்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினேஸ்குமார் சலோஜிதன் என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த...
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு...
சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார்....
யாழில்.பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இனம் தெரியாதநபர்கள் தாக்குதலினை மேற்கொண்டு உள்ளார்கள். யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிங்கராஜா (வயது 28) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று விட்டு மீண்டும்...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகளால் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சட்டத்தரணிகள், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு தமது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். அத்தோடு, நீதித்துறையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிய...
யாழ். நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார். இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி...
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது....
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் நேற்று இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பயங்கரவாத...
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் (வயது 39) என்பவர் எனது கணவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அவர், இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி எனக் கூறுவது வதந்தி. எனது கணவர் இதைத் (துப்பாக்கிச் சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார்” என்று, அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22) நல்லூர் தெற்கு வீதியில்,...
3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நாளை...
யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை நேற்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. நீதிபதியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச்...
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான முடிவை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ளன. கனிய எண்ணெய் குதங்கள் இந்தியா உட்பட்ட நாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதை கண்டித்தே பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.இதன்காரணமாக போக்குவரத்தில் பாரிய பாதக நிலை ஏற்பட்டது....
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம் நாத் கோவிந்த்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோவிந்த்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
