Ad Widget

வித்தியா கொலை வழக்கில் இரசாயன பகுப்பாய்வாளர் சாட்சியமளிப்பு

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார நேற்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார சாட்சியமளித்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதாய தீர்ப்பாயத்தின் மூன்றாம் கட்ட விசாரணைகள் நேற்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசி மகேந்திரன் தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts