- Thursday
- April 9th, 2026
சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், கைது...
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது. நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் நேற்றைய தினம்...
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக நாட்டில் இன்றைய தினத்தை துக்க தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி...
வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெற்றோல் வகை XP 100 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த...
ஐஎஸ் அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள்...
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம்...
பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக - எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வந்தது....
இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது. எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று பருகியமை விசேட அம்சமாகக் கருதப்படுகிறது....
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில; நேற்று புதன்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கடந்த 12ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். துன்னாலையில் கராஜ்ஜில் பணியாற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான...
தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர் மாதத்தில் 16.5% அதிகரித்து 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு குடும்பத்தின்...
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான...
”பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது?” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது... பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம். பாலஸ்தீனத்தின் மீது...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்களும் இதனை தெளிவாக வெளிப்படுத்துவதாக, அவர் தனது டுவிட்டர்...
யாழ். கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 10...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப்...
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது, நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது....
Loading posts...
All posts loaded
No more posts
