- Thursday
- July 24th, 2025

யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள்...

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில்...

கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி...

கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் ஒன்றை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில்...

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10...

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10...

பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ”மாணவர்களின் வாய்பகுதியைச் சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்துக்...

800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும்,...

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று (17) கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதனையடுத்து, இந்திய கடற்றொழிலாளர்களை...

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்துறை சுருவில் ஐயனார் கோவில் பூசகர் ஆலய மூல விக்கிரகமான ஐயனார் மற்றும் பரிவார மூர்த்தி விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர...

கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி...

கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....

யாழில் கடந்த 2 நாட்களில் மூன்று முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி, பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த முதியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில்...

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கு இந்த தீர்மானம் வழிவகுக்கும் என அந்த தீர்மானத்தின்...

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை...

All posts loaded
No more posts