- Wednesday
- July 23rd, 2025

அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். இந்திய தொலைக்காட்சி ஜீ...

புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்...

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டினை காலத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மாத்திரமன்றி வீதிஒழுங்குகளை மீறுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மணிநேரமும் குறித்த சோதனை நடவடிக்கை...

யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியை 75 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட, புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக தீக்காயங்களுக்கு உள்ளான...

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது. சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை (27) எடுக்கப்பட்ட போது, கடந்த ஒரு மாதகாலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞன்...

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு...

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த விகாரைக்கு அருகே போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ”வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக...

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையினால் ஏற்பட்ட தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதுபோன்ற திடீர் மின்தடை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் மின்...

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் இலங்கை அதிபர் சேவை...

டெங்குக் காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஆரம்பத்தில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூளைச் சாவடைந்து உயிரிழந்துள்ளார்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌத்த விகாரையில் மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள “சரசவி பௌத்த” விகாரையில் குறித்த முகாம் நேற்றையதினம் இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர் குழுவினரின் வைத்திய ஆலோசனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் அக்குபஞ்சர் சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌத்த விகாரை மற்றும்...

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது....

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான...

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், அதன் முகாமைதுவ பணிப்பாளருமாண சாந்தலிங்கம் வினோதன் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வல்லிபுரம் குருக்கட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டுவரும் அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலர்...

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு பொருந்தும் என...

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச்...

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதன் காரணமாக செவ்வாய்கிழமை (19) தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (PASS) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்....

போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய...

All posts loaded
No more posts