விண்கல் மழையை பார்வையிட வாய்ப்பு!!

வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை (Geminid meteor shower), பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையக்கு கிடைத்துள்ளது.

The Geminid meteor shower on December 13, 2020 was photographed in the Kubuqi Desert of Inner Mongolia, China. On that day, more than 200 meteors were photographed in the extremely cold night of minus 20 degrees

நாளை 14ஆம் திகதி வியாழக்கிழமை ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர்சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு வானில் இதை, அவதானிக்க முடியுமென ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட தெரிவித்துள்ளார்.

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் வேளையில் நூற்றுக்கணக்கான எரிகற்களை ஒரு மணி நேரத்தில் காண முடியும்.

விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகின்றன.

இதனால், ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஷ்வாணம்போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.

மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில், இவற்றை தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணால் இந்த எரிகல் மழையை பார்க்க முடியும்.

Related Posts