வழுக்கையாறு இந்து மயானத்தில் திருட்டு!!

வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்கான இரும்பு தூண்கள் நான்குகே கொள்ளையிடப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்!

யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற போது, அவர் ”தன்னை சிறைக்காவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி அழுதார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது....
Ad Widget

வடக்கிற்கு அனுப்பப்பட்ட சீனியில் 30,000 Kg திருப்பி அனுப்பப்பட்டது!

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்....

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; அடையாள அணிவகுப்பு இன்று!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான்...

இலங்கையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தாலும் இது பொதுவான வைரஸ்...

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழில் இதுபோன்ற இனிமேல் இடம்பெறாது!

”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத் தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம் அனுமதிக்கமாட்டோம்” என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது...

இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல்!! வீடும் அடித்துடைத்து பல இலட்சம் ரூபா உடைமைகளும் திருட்டு!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி ஜே/323 கிராம அலுவலர் பிரிவில் நேற்று (06) பிற்பகல் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடைமைகளை அடித்து நொறுக்கிய வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;...

வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!!

தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்திய...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

0 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணத்தை அனுப்புவது குறித்து ஊடகங்களில்...

பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றமை குறித்து, பெற்றோர் கண்டித்ததால் மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான மாணவியே நேற்றிரவு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்ட விண்ணப்பம் இறுதிக் கட்டத்தில்!!

வட மாகாணத்திற்கான, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 25,000 சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த 25,000 வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது....

வன்முறையில் ஈடுபட்ட வாகனம் மீட்பு : புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் கைது!!

தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

நெடுந்தீவுக்கு உலங்குவானூர்தியில் வந்த சுற்றுலா பயணிகள்!!

உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் (4) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதேபோன்று தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் உலங்கு வானூர்தியில் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத் துறையின் இது முதன்மையாக ஒரு...

சாட்சி கூற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!!

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்னதினம் (04) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு...

யாழில் அதிகரிக்கும் போதைப் பாவனை ; நுரையீரல், இருதய நோய் தொற்றுக்குள்ளாகும் இளையோர்

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை...

O/L பரீட்சையில் சித்தியடைந்த, சித்தியடையாத மாணவர்களுக்கான செய்தி!

கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி...

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ள நிலையிலேயே மாணவனின் விரல்...

வட்டுக்கோட்டை இளைஞனின் உயிரிழப்பு : அடையாள அணிவகுப்புத் திகதியில் மாற்றம்!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று...

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; இருவர் உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்” யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக யாழ்...

பலமிக்க மிக்ஜாம் சூறாவளி நகர்கின்றது ! இலங்கை குறித்து வானிலை அறிவிப்பு !

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜாம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்கின்றது. இந்த சூறாவளியானது இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தென் ஆந்திரப் பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது...
Loading posts...

All posts loaded

No more posts