- Saturday
- July 26th, 2025

வடக்கில் மாவீரர் நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளை போல் ஆடையணிந்து ,அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிந்தமை முற்றிலும் வெறுத்தக்கத்ததொரு செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது. நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி...

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூவர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்...

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட...

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து, கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அது...

மிக்ஜம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து மேலும் கூறுகையில், மிக்ஜம் சூறாவளியானது மேலும் தீவிரமைவதுடன் வடமேற்குத் திசையை நோக்கி இலங்கையிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று இந்தியாவின் தமிழ்...

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாதளவு சீரற்று காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வீதி கால்வாய் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுவதாவது : நாளாந்த தேவைகளுக்காக...

வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதீத வட்டி , மீற்றர் வட்டி...

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான குழுவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நெல்லியடி பகுதியைச்...

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 346 ரூபாயாகவும் ஓட்டோ டீசல் 27 ரூபாய் குறைக்கப்பட்டு 329 ரூபாயாகவு மண்ணெண்ணெய் 2 ரூபாய் குறைக்கப்பட்டு 247 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாய்...

யாழ் பொன்னாலை பரவைக் கடற்கரை பிரதேசத்தை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வனவளங்கள் திணைக்களம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான 354 ஏக்கர்...

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டிக்களத்தில் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப்பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர். சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம், சொலமன் சிறில், குலநாயகம், குமரகுருசாமி, பரஞ்சோதி, ஜேம்ஸ், இரத்தனவடிவேல், உள்ளிட்ட 12பேர் கையொப்பமிட்டுள்ளனர்....

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தமான் கடல் பிராந்தியத்தின் தென் பகுதியுடனும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துடனும் இணைந்த கடல் பிராந்தியங்களுக்கு மேலாக...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (29) இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வீட்டில் இருந்து 5 பவுன் பெறுமதியான நகை காணாமற் போயுள்ளதால் திருட்டில்...

இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே...

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து...

All posts loaded
No more posts