- Sunday
- July 27th, 2025

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின்...

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறும் போது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் முல்லைதீவு கொக்குத்தொடுவாய்...

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து...

காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசமானது கடந்த...

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் நேற்றைய தினம்(28) இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை...

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும் 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்....

சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கஜந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவகத்தில் பணியில் இருந்த வேளை மின்சாரம் தாக்கியதாகவும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது....

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பாகவே நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை புலிகளின் தலைவரின்...

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர்...

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம்...

மாவீரர் நாளான இன்று(27) அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர்...

சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமை போன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளனர். புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் இதனைத் தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின்...

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம்...

முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான...

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ”கார்த்திகை வாசம்” என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சிவிகே சிவஞானத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக அரசியற் செயற்பாட்டாளர்...

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு வீடொன்றுக்கு விசாரணை மேற்கொள்ளச்சென்றுள்ள நிலையிலேயே அவரது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ வைத்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில்...

All posts loaded
No more posts