- Tuesday
- May 19th, 2026
கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த வருடம் 2016ஆம் ஆண்டுடன்...
நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள்...
வறுமையான மாவட்டங்களில் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களே முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளதோடு கொடிய வறுமையான மாவட்டங்களாக இனங்கானப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் இடம்பெறும் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர்...
1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டதோடு புதிய 3 ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத்...
கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரிகளும் அசமந்த...
தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகிறது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம்...
பல கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர் என தடயங்களை வைத்து மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கொள்ளைக் கும்பலில் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏழாலை முனியப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் சந்தேநபர் அடையாளம்...
இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய இரணைமடு பகுதியில் இருந்து ராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதா? என...
சமஸ்டி அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமைகள் மீளக்கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் செயலகத்தில் நேற்றய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ”எமது பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்பதே எமது கரிசனை. எமது...
ஆறு அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்த 40000 மெட்ரிக் டொன் எரிபொருளை தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை பரிசோதிப்பதற்காக அங்கு பரிசோதனையாளர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என...
தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெறவேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ ஆக்கபூர்வமாக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெறாது இருக்க முடியாது என்பதை சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது. யாழ் மாநகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல்...
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலிற்கு முன் தமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் எதிர்வரும் 15...
“2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கொடும் பிடிக்குள் சிக்கியிருந்த ஊடகத்துறைக்கு, இப்போது அதிகமாகவே சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தச்...
பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு சூரிச் சிவன் கோவிலின் அன்பேசிவம் அமைப்பால் வரப்புயர மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் கடந்த செவ்வாய்க்கிழமை (07.11.2017) முகமாலையில் சம்பிரதாயபூர்வமாக இம்மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார். சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சூரிச் சிவன் ஆலயத்தின் அன்பேசிவம் அமைப்பு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கெங்கும் பல்வேறு...
இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். [caption id="attachment_87594" align="aligncenter" width="634"] In this July 18, 2017, photo, a Sri Lankan man known as Witness #202 shows branding...
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக...
Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 2வது தடவையாக எதிர்வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை கோப்பாயில் அமைந்துள்ள சக்தி ஓய்வு விடுதியில் நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts
