- Sunday
- May 17th, 2026
தேசிய இரத்த பரிமாற்ற மையம் இரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்துள்ள இரத்த அளவானது டெங்கு மற்றும் ஏனைய நோய்களால் குறைந்துள்ளதாகவும் அதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் குறித்தமையத்தின் அத்தியட்சகர் டாக்டர்.ருக்ஷான் பெள்ளன தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவிக்கையில்; ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல்...
முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்வாய் வடக்குப் பகுதியை சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது – 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது -36), யாழ்ப்பாணம் மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது -19), யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது-19) ஆகியோரே...
தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியமை, பதாதைகளை வைத்தமை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன....
தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், ‘ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என குறிப்பிட்டார். இவ்வாறு குறிப்பிட்டமை, ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததென, சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றின்...
நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவு தூபியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையிலான குழுவினரின்...
கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானார்.சம்பவத்தில் மற்றுமொரு மாணவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொக்கோ (JCB) இயந்திரம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது புரண்டுள்ளது.இதன்போது அனர்த்தத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் பலியானவர் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும்...
தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு...
தேர்தல் பரப்புரைக்காக, வீடுகளுக்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு...
நாட்டில் வெவ்வேறு துறைகளில் 5 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்நாட்டு தொழில் தேவை தொடர்பில் நடத்திய கணக்கெடுப்பின் போது வெவ்வேறு துறைகளில் 4 இலட்சத்து 97,302 வேலைவாய்யப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வேலைவாய்ப்புக்களில் தையல் இயந்திர ஊழியர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இரண்டாவதாக...
யாழ். குடாநாட்டில் பொலிசாரின் அசமந்த போக்கினால் போதைபொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...
முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறப்பாக தேர்வு செய்யத் தவறிவிட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக்...
கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே...
பலம் இன்றேல் அதிகாரங்களைப் பெற முடியாது. எம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள எமக்கென அதிகாரங்களைப் பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒரு கேள்வி என்ற அடிப்படையில், இந்த வாரம் ’70 வருட அரசியல் போராட்டத்தில் தமிழ் மக்கள் கண்ட பலன் என்ன?’ என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் பதிலில் இவ்வாறு...
வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம் குட்டிநகர் என்ற பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த விட்டில் வசித்து வந்த செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் அவருக்கு அறிமுகமான பியசேனகே எதிரிசிங்க என்ற இருவருமே தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம்...
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாண நகரில் இடம்பெறும் பரப்புரைக்...
பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கா.பொ.த சாதாரண தர மற்றும் கா.பொ.தர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு...
யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.நாக விகாரையில் இடம்பெற்றபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீ விமல தேரர் மேலும் தெரிவிக்கையில்,...
இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்....
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கலையகத்துக்குள் புகுந்த நபர் அந்தநிறுவனத்தின் செய்திப்பணிப்பாளரைத் தாக்கியதுடன், அவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்ய முற்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்டவர் நிறுவன ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தனியார் செய்தி நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
