- Sunday
- May 17th, 2026
கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அதாவது 08.01.2018 இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டமையினால் தாம் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுவதினை கண்டித்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2...
சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜினி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம்...
இலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன்...
வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது. தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள்...
புதிய வருடத்திலாவது வடமாகாணத்திற்கு தேவையான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....
தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்லும் பயணிகளுக்கான பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில்...
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். குறித்த உறுப்பினரின் வெற்றிடத்திற்கே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் முன்மொழியப்பட்ட வர்த்தகர்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுவில் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் தமிழ்...
புத்தூர் - மீசாலை வீதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது, பட்டத்திற்கு பொருத்தியிருந்த மின்சார வயர் வீதியால் சென்ற பிரதான மின்வடத்துடன் உரசுண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த பாஸ்கரன் டர்சன் வயது (19) என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் கூறினர். உயர்தரத்தில்...
இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என வடமாகாண முதலமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நியமனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் வழங்கும் போது பரீட்சையில் பெற்ற புள்ளி ஒழுங்கில் தெரிவு வழங்கப்படல் வேண்டும் என்பது நடைமுறை விதி கோவை இல...
காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில், ‘காங்கேசன்துறைக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க இலங்கை மற்றும் இந்தியா...
நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கிடாய்ச்சூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்குக் கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒரு திருப்பு முனையில்...
யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை யாழ். உஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான, எம்.ஏ. சுமந்திரன், சீ.வீ.கே. சிவஞானம், ஜெயசேகரம்...
இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
பொலிஸ் விசேட அதிரடி படையணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் இது தொடர்பான மேலதிக விபரங்களை பார்வையிட முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம கிடைக்கும்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று (சனிக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி...
Loading posts...
All posts loaded
No more posts
