Ad Widget

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் : முதலமைச்சர்

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜினி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவரும் நிலையில் நேற்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த சீ.வி.விக்னேஷ்வரன், ஆன்மீக அரசியலை நான் எப்போதும் வரவேற்பேன். அந்த வகையில் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதையும் நான் வரவேற்கிறேன், என முதலமைச்சர் பதிலளித்திருக்கின்றார்.

Related Posts