- Saturday
- May 16th, 2026
பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கேப்பாப்புலவு காணிகளை...
தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குறித்த பகுதியில் பேரூந்து ஒன்றில் கைக்குண்டு ஒன்று வெடித்தமை தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேரூந்தில் பயணித்த இராணுவ வீரர்...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினாலேயே இந்த முறைப்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று...
தேசியத் தலைவர் பிரபாகரனின் கனவுக் கிராமமான அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம் ஒன்று, வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 2.0 மில்லியன் செலவிலேயே குறித்த பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அவர்...
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (01.03.2018) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !!
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் கடந்த புதன்கிழமை...
“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதுக்காக தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் செல்லவுள்ளதாக” வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (01) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண...
“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுவதாக” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே இவ்வாறு தெரிவித்தார்....
வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான...
கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும், தமிழ், முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன்போது,...
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுடன் (01.03.2018) ஒருவருடம் ஆனதையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது அதிகளவான பொலிஸார் நேற்று காலைமுதல் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு...
வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இந்த...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் கோத்தாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் அழைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்ற பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர். அவர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 117வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செலயகத்தில், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது, ஐ.நா மனித உரிமைப்...
சிரிய படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும் மாலை 4 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் நடைபெறவுள்ளது. இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் இனப்படுகொலைக்கு...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார். இந்நிலையில், குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மாணவனின் உடலை கண்டெடுக்கப்பட்டது....
உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...
இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக...
கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண நகரில் இன்று முற்பகல் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது. யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி யாழ். பிராதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு யாழ்.மாவட்ட செயலாளரிடம் மனு...
வடக்கு மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கும் நோக்கில் நிதி வழங்குனர்களுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 4.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள விசேட...
Loading posts...
All posts loaded
No more posts
