Ad Widget

பொலிஸாரின் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுடன் (01.03.2018) ஒருவருடம் ஆனதையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது அதிகளவான பொலிஸார் நேற்று காலைமுதல் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்த கேப்பாப்புலவு மக்கள், தமக்குரிய நிலங்களைப் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் சிவநேசன், மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்திருந்தனர்.

Related Posts