பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்றிற்குள் ஓட்டை!

கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

என்னை அரசியலில் இணைத்த தமிரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது ஜனநாயகமற்றது : அனந்தி

“வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக” வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்...
Ad Widget

காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை!!

காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம்...

கஞ்சாவுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விற்பனை செய்வதற்கு மிகவும் நூதனமான முறையில் கஞ்சாவை மறைத்து வைத்து சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவர்...

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்கள் மீது தாக்குதல்!!

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய...

ஊரடங்குச் சட்டம் நீக்கம்: கண்டியில் தொடர்ந்தும் STF பாதுகாப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த...

கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இந்த ஊடரங்கு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்... முஸ்லிம்...

15 வயதையடைந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை...

நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சிவநேசன்

வவுனியாவில் மகாவலி திட்டத்துடன் தொடர்புடைய படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதலில் இது தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டுமென வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வட. மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை)...

புகையிரத கடவையில் விபத்து; ஒருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (05) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட நபர் மீது புகையிரதம் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். பரந்தன் புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர்...

கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு வீசிய ஆவா குழுவைச்சேர்ந்த இருவர் கைது!

கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, பெற்றோல் குண்டு வீசிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் யாழ். கொக்கட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதில் ஒருவர் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த வீட்டிற்கு சென்ற...

யாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தால் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்!!

யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே மாவட்டச் செயலர்...

இந்து ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

வட. பகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இக்கவனயீர்ப்பு போராட்டம், ஆதீன முதல்வர்கள் மற்றும் துறவிகள் முன்னிலை வகிக்க, சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள் மற்றும் தர்மகத்தா சபைகள்,...

முல்லைத்தீவில் புதையல் தோண்டிய முன்னாள் போராளிகள் உட்பட 10 பேர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய வெடிமருந்துகள், மின்பிறப்பாக்கி மற்றும் பல உபகரணங்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். விசாரணையின் பின்னர் இவர்களை...

பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக்...

‘மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்’ : வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலையை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு இளைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதப்படுகொலையை கண்டித்தும், இவ்விடயத்தில் ஐ.நா. தலையிட்டு உடனடி தீர்வு வழங்க வேண்டுமென கோரியும், கடந்த 2009ஆம்...

யாழ் பல்கலைக்கழக பதிவாளரின் முக்கிய அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் வடக்கில் முதலிட வேண்டும் : சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர்

“இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால் வடக்கில் முதலிட வருமாறு புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ் மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று...

யாழ்.நகரப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் இரும்பு கடை நடாத்தி வரும் ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதான சிலுவைராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் தனது கடைக்கு பின்புறம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார்...

விடுதலைப்புலிகளின் குண்டே வெடித்தது! : இராணுவ வீரரின் அதிர்ச்சித் தகவல்

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸாருக்கு...
Loading posts...

All posts loaded

No more posts