வடக்கு முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – வவுனியா, மன்னார் மின்மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த தடை ஏற்படும் என இலங்கை...

தாவடியில் கைதாகிய ஆவா குழு உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கிய நபர் என்று கூறப்பட்டவரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர். கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...
Ad Widget

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக இன்று (23) இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த...

பிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்!

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக...

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தது என்ன? – மௌனம் கலைத்தார் துளசி

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படாத நிலையில் அங்கு தொடர்ந்தும் நிற்க விரும்பாமலேயே தான் வெளியேறியதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தின...

ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை...

மண்டைதீவு இராணுவ முகாமின் காணி உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளவும்: கஜதீபன்

மண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு வட.மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்டைதீவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்ட வட.மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மண்டைதீவின் நன்னீர் வளமுள்ள பகுதியில்...

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி பேரூந்துக் கட்டணங்கள் 12.5% வீதத்தினாலும், ஆரம்பக் கட்டணத்தினை 12 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை தனியார் பேருந்துகளில் புதிய...

தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்!

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தென் பகுதியை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தொற்று நாடு மூடுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொற்றால் இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா...

மின்னல் தாக்கத்தால் யாழில் பற்றி எரிந்த தென்னை

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்த நிலையில் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் யாழ் நகரில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியதில் தென்னை மரம்...

கிளிநொச்சியைச் சேர்ந்த தாயார் மகனுக்கு அரச வேலை கேட்டு யாழ்.தளபதிக்கு கடிதம்!!

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் எழுதிய கடிதம்...

கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சாதனை!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதத்தை பல்கலைக்கழக மாணவர்கள் சீராய்வது சிறந்தது. கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை” இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். “யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தலை இம்முறை தாங்கள் செய்யவேண்டும் எனக் கேட்டார்கள். சரி அடுத்த முறை...

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை கொடுப்பார்களா? சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கை ஊடகங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளாமல், சிங்கள மக்கள் மத்தியில் எம்மை...

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

வடக்கு, கிழக்கு , இணைக்கப்பட வேண்டும், அவ்விணைப்புக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டு என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,...

யாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் இளைஞரொருவர் யாழ். தாவடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர், யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என...

யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி

யாழில். மதுபான நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பத்தலைவர் மாரடைப்பு காரணமாகே உயிரிழந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த மதுபான நிலையத்தில் பணிபுரிந்து வந்த அச்சுவேலி இடைக்காடு பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கௌரீசன் (வயது -38) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில்...

அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா?- கைதிகள் அமைப்பு சந்தேகம்

யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றியின் ஒன்பதாவது ஆண்டு நினைவுத் தினத்தின்போது, தமிழ் அரசியல் கைதிகள் என்று...

அதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போதே குறித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது....

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவையொட்டிய இரத்தான நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இரத்தத்ததான நிகழ்வில் பெருமளவான...

யாழில் மதுபான சாலைக்குளிலிருந்து ஊழியரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகர் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென...
Loading posts...

All posts loaded

No more posts