- Friday
- May 15th, 2026
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவையொட்டிய இரத்தான நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இரத்தத்ததான நிகழ்வில் பெருமளவான...
யாழ்ப்பாணம் நகர் இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென...
“வடக்கில் விகாரை அமைத்தாலோ, தெற்கில் கோவில் அமைத்தாலோ யாருக்கும் கேட்க உரிமையில்லை”: சஜித் பிரேமதாஸ
வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது, தெற்கில் இந்து ஆலயங்களை அமைக்கக்கூடாது என சிலர் சிந்திக்கின்றனர். இவ்வாறானவர்கள் எமக்கிடையில் இன,மத வேறுபாட்டை உருவாக்குவதனூடாக...
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையால் அங்குள்ள இளைஞர், யுவதிகள் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தற்போதுள்ள அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவும் அதனை தக்கவைத்துக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் முரண்படுகின்றார்களே...
கொடிகாமம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கொடிகாமம் பகுதியில் திடீரென பொலிஸார் மேற்கொண்ட வீதி நடவடிக்கையின்போதே...
உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக...
க.பொ.த. உயர்தர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். www.doe.nev.s.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இந்தப் பரீட்சைக்கு...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவான் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (வயது (66) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 5 பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாமற்போன அவர் குடும்பத்தினரால் தேடப்பட்டு...
மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது. “தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார்” என்று...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தரம் 11 மாணவர்களுக்கான பிரதான பாடங்களின் நூல்கள் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நாடுமுழுவதும் அனைத்து தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநுால்களுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “இந்த...
எம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9...
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்னாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு வெள்ளை காரில் வந்தவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது. சிவில் உடையில் வந்த எட்டு பேர் கொண்ட...
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், முன்னாள்...
முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு. எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் முடங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழமைபோல் செயற்படுகின்றன. அத்துடன், கிளிநொச்சி நகரெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசமெங்கும்...
முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்துகள் புறப்படுவதற்கான நேர அட்வணை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் அறிவிக்கப்பட்டள்ளன. அதன் முழு விவரம் வருமாறு,
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...
படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று...
Loading posts...
All posts loaded
No more posts
