Ad Widget

உலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த

உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலகில் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இல்லாத தைரியத்துடன் போரிட்டோம். இந்தப் போராட்டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்தனர்.

இந்தப் போரில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என பல்லாயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்தனர். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர். நாட்டு மக்களின் சுதந்திரம், வாழும் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரும் உயர்ந்த மானிதர்களே.

இறுதிக் கட்ட யுத்தத்தில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இராணுவத்தினரும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் மோசமான காட்டிக் கொடுப்பாகும்.

நாட்டுக்கு எதிராக துரோகம் செய்பவர்களும் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுப்பவர்களும் நாட்டினது நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts