தவில் வித்துவானின் சடலம் யமுனா ஏரியிலிருந்து கண்டெடுப்பு!

யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவான் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (வயது (66) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாமற்போன அவர் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்தார்.

இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அவரின் மனைவி அப்பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார். கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தினைக் கைப்பற்றினர்.

குறித்த சடலம் தொடர்பான விசாரணை மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts