வங்கி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பு?

அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் வரும் ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க அறிவித்துள்ளார். அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு...

சுழிபுரம் மாணவி கொலை : ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

சுழிபுரம் மாணவி படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்....
Ad Widget

வடக்கு உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன் நீடிப்பார்!

“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” இவ்வாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான...

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் பேரணி!!

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை சங்கானை பிரதேச செயலகம் நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். சழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சழிபுரத்திலிருந்து சங்கானை...

மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட...

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் மீது கொலைவெறி தாக்குதல்!! தடுக்க சென்ற சகோதரியின் கையும் துண்டிப்பு!!

மானிப்பாயில் நேற்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் மற்றொரு தாக்குதலில் இளைஞர் மற்றும் அவரது சகோதரி என இருவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் லோட்டன் வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவுடன், வீட்டின் குடும்பத்தலைவருக்கு...

சிறுமிகள் துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். “ஆசிரியர், கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளந்தவர். கௌளரவமாக மணம் முடித்து, பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் குடும்பத்தை பார்க்குமளவுக்கு உழைக்கிறார்....

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது

“நேற்று ஒரு தங்கைக்காக ,இன்று ஒரு சிறுமிக்காக, நாளை இன்னுமோர் உறவுக்காக எனப் பெயரளவில் கூடிநின்று ஆர்ப்பரித்துவிட்டு ஓய்ந்துவிடப்போகிறோமா? இன்று போதைப்பொருள் பாவனையும், பாலியல் குற்றங்களும், கொலை கொள்ளைகள், குழு மோதல்கள், சாதியின் பெயரால் கலவரங்கள் என்பன அதிகரித்த ஒரு வஞ்சிக்கப்பட்ட பூமியாகிவிட்டது எம் தாய்மண்” இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்...

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில்...

சுழிபுரத்தில் தொடரும் பதற்றம் – நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சுழிபுரம் சந்தியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்....

மானிப்பாயில் வயோதிப் பெண் திட்டமிட்ட கொலை?

மானிப்பாயில் வயோதிபப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்தே அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்ணே கொலை...

சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை யாழ்ப்பாண மாவடத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடையைப்பை நடத்த...

காவல் துறையா? கஞ்சாத் துறையா?? – யாழ் பல்கலை மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில்!!

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள்...

4,800 பட்­ட­தா­ரி­க­ளுக்கே அடுத்த மாதம் நிய­ம­னம்!!

கடந்த ஏப்­ரல் மாதம் இடம்­பெற்ற நேர்­மு­கத் தேர்­வு­க­ளில் தெரிவு செய்­யப்­பட்ட பட்­ட­தா­ரி­க­ளில் 4 ஆயி­ரத்து 800 பேருக்கு முதல்­கட்­ட­மாக நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திலே அனு­மதி கிடைக்­கப் பெற்­றுள்­ளது. பட்­ட­தா­ரி­களை அரச சேவை­யில் இணைத்­துக் கொள்­வ­தற்­காக நடத்­த­பட்ட நேர்­மு­கத் தேர்­வில் 25 புள்­ளி­க­ளுக்கு அதி­க­மாக பெற்­றுக் கொண்­ட­வர்­களே...

மானிப்பாயில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை!

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது. நீலாதேவி (வயது -69) என்ற பெண்ணே உயிரிழந்து குருதி வெள்ளத்தில் மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ள அஞ்சல் ஊழியர்கள்!

அஞ்சல் பணியாளர்களின் இரண்டு வார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும், இன்று (வியாழக்கிழமை) முதல் சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 16 நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில், அஞ்சல் ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ள போதிலும், தமது கோரிக்கை...

பிஸ்கட், ஜெலியை உண்ணகொடுத்து மாணவியை மூன்றுபேர் அழைத்து சென்றனர் : மாணவனின் திடுக்கிடும் சாட்சி!

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான். சிறுமிக்கு பிஸ்கட்...

சுழிபுரத்தில் நிலக்கீழ் கசிப்பு உற்பத்தி: பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!!

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. “சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தியிடம் முற்றுகையிடப்பட்டது. 27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி வந்தவர் என சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்திலிருந்து...

யாழ்.நகரில் ஐஸ்கிறீம் தானப்பந்தல்

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் எந்திரவியல் டிப்ளோமா மாணவர்களால் பொசன் போயாவை முன்னிட்டு ஐஸ்கிறீம் தானப்பந்தல் சேவை யாழ்ப்பாண மாநகரில் நேற்றயதினம் நடத்தப்பட்டது. எந்திரவியல் டிப்ளோமா சிங்கள மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ஐஸ்கிறீம் தானப்பந்தலில் தமிழ் மாணவர்களும் ஒத்துழைப்பை வழங்கினர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பத்திரிசியார் கல்லூரி வீதி சந்திக்கும் இடத்தில் நேற்று முற்பகல் முதல்...

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்!!

மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் இன்று காலை புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாள்வெட்டு என பெரும் அட்மூழியத்தில் ஈடுபட்டு தப்பித்துள்ளது. வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். “10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்தது. வீட்டுக்குள் புகுந்த கும்பல்,...
Loading posts...

All posts loaded

No more posts