- Thursday
- May 14th, 2026
அக்கராயன் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி வட.மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியே பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அக்கராயன் பிரதேசத்தில் இருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...
தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழில் கடந்த சில காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,...
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில்...
முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர் கைது...
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் கூரிய வாளுடன் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யூனியன் கல்லூரி வீதியூடாக பயணித்தபோது, அக்கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை துரத்திச் சென்று சுற்றிவளைத்த...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொலிஸார் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும். பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாண அவைத்...
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்ற போதிலும் தற்பொழுது நிலவும் வட்டி வீதங்கள் காரணமாக கடனை பெற்று வர்த்தக...
சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த ஆடைகள் சிறுமி றெஜினாவினுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 2 பேரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரின் வீடு ஒன்றிற்குள் புகைந்து குறித்த இருவரும் தாக்குதல்...
வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
தனியார் பெற்றோல் பௌசர் உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்துக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சங்கத்தின் செயலாளர் சாந்த...
நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால் நாங்கள் என்னண்டு வியாபாரம் பார்ப்பது! – யாழ் வர்த்தகர்கள்
மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நேற்று வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ் நகரம் உள்ளிட்ட பிரதேச வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துளைப்பு வழங்க மறுத்த நிலையில் நேற்றயதினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை. சில இடங்களில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு காலையில் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் “நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால்...
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்படி திருவிழாவின்...
மல்லாகத்தில் இளைஞர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் நபரைத் தெல்லிப்பழைப் பொலிஸார் கைது செய்யாது தவிர்ப்பது தொடர்பாகச் சுட்டிக்காட்டி விசாரணையில் திருப்தியில்லை என்று எதிராளி தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்ததை அடுத்து உரியமுறையில் விசாரிக்கத் தவறினால் வேறு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்கை விசாரிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார் மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.அலெக்ஸ்ராஜா. மல்லாகத்தில்...
மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக...
மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரச...
சமையல் எரிவாயு விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தவராசா...
வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என வட.மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது...
Loading posts...
All posts loaded
No more posts
