Ad Widget

பட்டதாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் !!!

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்ற போதிலும் தற்பொழுது நிலவும் வட்டி வீதங்கள் காரணமாக கடனை பெற்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது சிரமமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.எனவும் இந்த நிலைப்பாட்டை புறந்தள்ளி ஆற்றல்மிக்க தொழில் துறையினர் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய வைப்பதே குறித்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு தொழில்துறையினருக்கு கடன் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிரமங்கள் இன்றி தொழில் துறையினருக்கு வர்த்தக நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றும் திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Related Posts