வடக்கில் 14 பாடசாலைகளை தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை!!!

வடக்கு மாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்...

தமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – சி.வி.

தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் இதனால் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள்...
Ad Widget

இலங்கை மீதான புதிய தீர்மானத்தை போலித் தேசியவாதிகள் எதிர்க்கின்றனர் – சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படக்கூடாது என போலித் தேசியவாதிகள் கூறி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அத்தகைய சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்...

பொலிஸார் மீது தாக்குதல் – ஐவர் கைது

யாழ்.நகரை அண்டியுள்ள அரியாலை கிழக்கு பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையினை முறியடிக்க சென்ற அதிரடிப்படையினருக்கும், மணல் கடத்தல்காரா்களுக்கும் இடையில் தர்க்கம் மூண்டுள்ளது. மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். அரியாலை...

மாற்றுத் தலைமையுடன் வலுவான அணி தேர்தலில் களமிறங்கும் – சுரேஸ்

பல கட்சிகள் இணைந்ததான ஒரு புதிய கூட்டு உருவாக்கப்பட்டு மாற்றுத்தலைமையுடன் கூடிய வலுவான அணியொன்று கட்டியமைக்கப்படுமென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அணி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் தலைமை குறித்து ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது: பொன்சேகா

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத்...

6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி

6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது....

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம்

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...

மானிப்பாய் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக தனியார் காணிகள் சுவீகரிப்பு

மானிப்பாய் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கவென தனி நபர்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல், காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகம் ஊடாக இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள 6 தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு கொண்ட காணிகளை கடந்த 24 வருடத்திற்கு மேலாக பொலிஸார் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அக்காணிகளை...

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளரது. யாழில் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று...

பதுளையில் நிலநடுக்கம்!

பதுளை ஹாலில வெலிமட மற்றும் பசறை பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் போலி விமானச்சீட்டு விநியோகித்து பல இலட்சம் மோசடி!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு பயண முகவர் நிறுவன முகாமையாளர் தலைமறைவாகி விட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறையிடப்பட்டது. யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநயக்க கூறியுள்ளார். வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஒரே நிபந்தனை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரும்...

காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து...

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவால் முன்வைப்பட்டு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான விலைச் சூத்திரத்தின்...

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது...

என்னிடம் வரும் அரசியல் வாதிகள் உறவினர்களின் தேவைகள் பற்றிபேசவே வருகின்றார்கள் – ஆளு­நர்

என்­னி­டம் வரும் அர­சி­யல்­வா­தி­கள் கட்சி சார்ந்த தேவை­கள், உற­வு­கள் சார்ந்த வேலை­க­ளைப் பேசவே என்­னி­டம் வருகின்­றார்­கள். மாறாக வடக்கில் பாாிய பிரச்சினையாக மாறியுள்ள குடிநீா் பிரச்சினைக்கு தீா்வினை காண் பதற்கு வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒரு திட்டத்தை கூட முன்வைக்கவில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் தெரி­வித்­துள்­ளார். கொழும்பு ஊட­கம்...

யாழில் கோடாரி வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்துவில் கிழக்கைச் சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதில், குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தரை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், சாவகச்சேரி...

வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!- ஓரிரு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

ஒன்றரை வயதுக் குழந்தையுடன் இளம் தாயார் தற்கொலை முயற்சி!!

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே தீவைத்தார். எனினும் அவர் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச்...
Loading posts...

All posts loaded

No more posts